Tuesday, October 29, 2013

விக்னேஸ்வரனின் கருத்து இன விரோதத்திற்கு வழிவகுக்கும்: அமைச்சர் விமல் வீரவன்ச!

Tuesday, October 29, 2013
இலங்கை::வடக்கில் சிங்கள குடும்பங்களை குடியேற்றினால் இன விரோதத்திற்கு வழிவகுக்கும் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் விமல் வீரவன்ச கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் விமல் விரவன்ச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிங்கள மக்கள் விக்னேஸ்வரன் கூறியதைப் போன்று கடைப்பிடித்திருந்தால், தெற்கில் தமிழர்கள் குடியேற முடியுமா?.

மேல் மாகாணத்தில் அனைத்து இன மக்களும் ஒன்றாக வாழ்கின்றனர். அதைப் பார்த்து நாம் மகிழ்ச்சியடைகிறோம்.

சிங்களவர்கள் வடக்கில் குடியேற முடியாது என்று கூறினால் தமிழர்கள் மட்டுமா வடக்கில் இருக்க வேண்டும்? வடக்கிற்கு வெளியில் வாழ தமிழர்களுக்கு உரிமையில்லையா?

கொழும்பில் தான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் கல்வி கற்றது மற்றும் தற்போது வாழ்வது எல்லாம். அதை மறந்து விடக்கூடாது.

போருக்கு பின்னர் நாட்டில் மெதுவாக மீள் கட்டமைப்பு மற்றும் அனைத்து சமூகங்கள் இடையேயான இடைவெளி குறுகி வருகிறது. எனினும் மீண்டும்   நாட்டிப் பிரிக்க முயற்சித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார் அமைச்சர் விமல் விரவன்ச.
 
tamil matrimony_HOME_468x60.gif

No comments:

Post a Comment