Wednesday, October 2, 2013

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் இடையில் சந்திப்பு!

Wednesday, October 02, 2013
இலங்கை::அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள்,  தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேஷப்பிரியவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
 
தேர்தலுக்கு பின்னரான நிலைமைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
தேர்தல்கள் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த சந்திப்பில் அண்மையில் புத்தளம்  பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்ட புள்ளடியிடப்பட்ட வாக்குச்சீட்டுகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
 
இங்கு கருத்துத் தெரிவித்த ஜனநாயக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த மானவடு
அதிகாரிகளின் கவனயீனத்தினால் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக அவர் கூறுகின்றார்
அத்துடன்  ஏற்கனவே எண்ணப்பட்ட வாக்குசீட்டுக்களே அந்த இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.அதனால் கட்சி என்ற வகையில் எமக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை"
 
ஐக்கிய இலங்கை மகா சங்கத்தின் தலைவர் ஜெயந்த குலதுங்க இந்த விவகாரம் குறித்து குறிப்பிடுகையில்
 
புத்தளம் சம்பவம்  பாரியதொரு விடயமல்ல, அது தவறுதலாக இடம்பெற்றுள்ளது. வாக்குகளை எண்ணிய பின்னரே அவை கிடைத்துள்ளன. அதனால் இவ்வாறான தவறுகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருப்பதற்கான தீர்மானங்களை மேற்கொண்டனர். எனவே எதிர் காலத்தில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாது என நான் நினைக்கின்றேன்"
இதேவேளை கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீரத்தி தென்னக்கோனும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தார்.
 
இந்த தேர்தல் செயற்பாடுகளில் பாரிய சந்தேகங்கள்  ஏற்படும் வகையில் செயற்பட்ட அனைத்து  அதிகாரிகளுக்கும் எதிராக நடவடிக்கை  எடுக்க வேண்டியது அவசியமானதாகும். தேர்தல் செயற்பாடுகளின்போது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமேயானால் பொதுமக்களுக்கு தேர்தல் மீது நம்பிக்கை இல்லாது போய்விடும்."
மக்கள் விடுதலை முன்னணியின் சுனில் வட்டகல கருத்துத் தெரிவிக்கையில்..
 
குறிப்பாக 17 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளவாறு, தேவைப்படும் பட்சத்தில் தேர்தலுக்கு முன்னர் தேர்தல்கள் ஆணையாளரால் தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்களை பெற்று நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். எனவே எதிர்காலத்தில் தேர்லொன்றை நடத்தும்போது, பொலிஸ் மாஅதிபருடன் கலந்துரையாடி தமக்குத் தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்களை தேவைக்கேபற்ப பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கமைய பொலிஸ் உத்தியோகத்தர்களை தேர்தலுக்கு முன்னரே பெற்றுக்கொண்டு கடமைகளில் ஈடுபடுத்துவதாக அவர் உறுதியளித்துள்ளார்"

No comments:

Post a Comment