இலங்கை::சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக புதிதாக பதவியேற்று முதற்தடவையாக கிழக்கு மாகாணத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி இன்று 30 புதன்கிழமை காலை விஜயம் செய்தார். இதன்போது இவருக்கு மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பொலிசாரினால் வரவேற்பளிக்கப்பட்டது.
மட்டக்களப்புக்கு வருகை தந்த இவரை, கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர மற்றும் மாகாணத்திலுள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர்களும் வரவேற்றனர்;.
இதனைத் தொடர்ந்து பொலிசாரின் அணி வகுப்பு மரியாதை இடம்பெற்றதுடன் பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் அமைச்சின் செயலாளருக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டனர்.
இந்த விஜயத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் ஒருங்கிணைப்புச் செயலாளர் கபில உபேசகர,கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர,மட்டக்களப்பு அம்பாறை பிரதிப் பொலிஸ் மா அதிபர் வி.இந்திரன்,திருகோணமலை பிரதிப் பொலிஸ் மா அதிபர் கபில ஜயசேகர,கந்தளாய் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் மட்டக்களப்பு மாநகர சபையின் நகர மண்டபத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பொலிஸாருக்கான விசேட கூட்டமொன்றும் நடைபெற்றது.
அதிலும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிதிகள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment