Thursday, October 31, 2013

கொழும்பில் காமன் வெல்த் மாநாடு: பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க அனுமதி- காங். உயர்மட்ட குழுவில் முடிவு!!

Thursday, October 31, 2013
புதுடெல்லி:காமன்வெல்த் அமைப்பில் மொத்தம் 53 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இங்கிலாந்து ராணியை தலைவராக கொண்டு செயல்படும் இந்த அமைப்பின் மாநாடு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு உறுப்பு நாட்டில் கூடி நடைபெறும்.

1971–ம் ஆண்டு முதல் காமன்வெல்த் அமைப்பில் உள்ள நாடுகள் இப்படி ஒன்று கூடி தங்களுக்குள் பல்வேறு ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு பற்றி விவாதித்து வருகின்றன. இந்தியாவில் 1983–ம் ஆண்டு இந்த மாநாடு நடந்தது.

அந்த வரிசையில் காமன் வெல்த் அமைப்பின் 23–வது மாநாடு இலங்கை தலைநகர் கொழும்பில் வருகிற 10–ந்தேதி தொடங்கி 17–ந்தேதி வரை நடைபெற உள்ளது. இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே தலைமையில் இந்த மாநாடு நடக்கிறது. 50–க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் வருவதால் இந்த மாநாட்டுக்கு இலங்கை பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்துள்ளது.

கொழும்பு காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ளக் கூடாது. அந்த மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும். அதோடு காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை தற்காலிகமாக நீக்க இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும்’’ என்று புலிகளின் ஆதரவினர்களால் கூறப்பட்டிருந்தது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், ‘‘காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்கவில்லை என்று பிரதமர் உடனே அறிவிப்பு வெளியிட வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் புலிகளின் ஆதரவு தலைவர்களின் வேண்டுகோள்களை மத்திய அரசு கொஞ்சமும் கண்டு கொள்ளவில்லை.

காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது பற்றி எதுவும் தகவல் வெளியிடாமல் பிரதமர் மன்மோகன்சிங் வழக்கம் போல் மவுனமாக இருந்தார். இதற்கிடையே வெளியுறவு மந்திரி சல்மான் குர்ஷித் தனது இலங்கை பயணத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தார்.
அப்போதே புலிகள் ஆதரவு தமிழர்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை என்பது உறுதியானது.

இந்த நிலையில் இது தொடர்பாக விவாதிக்க காங்கிரஸ் உயர்மட்டக் குழுக் கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. அதில் கொழும்பு காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா அவசியம் பங்கேற்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

எனவே பிரதமர் மன் மோகன்சிங் நவம்பர் இரண்டாவது வாரம் இலங்கை செல்கிறார். இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பதை தடுக்க, வேண்டுமானால் கொழும்பு மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ள வேண்டும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இலங்கை அரசுடன் தொடர்பில் இருந்தால்தான் இலங்கை தமிழர்களுக்கு மேம்பாட்டு பணிகள் செய்வதை உறுதிப்படுத்த முடியும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சொல்கிறார்கள். எனவே இந்த சர்ச்சையில் தமிழ்நாட்டு புலிகள் ஆதரவு  கோரிக்கையை ஓரம் கட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீர்மானித்து விட்டனர்.

சமீபத்தில் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த இந்தியாவுக்கான இலங்கை தூதர், ‘‘கொழும்பு மாநாட்டில் பங்கேற்கா விட்டால், இந்தியா தனிமைப் படுத்தப்பட்டு விடும்’’ என்றார்.
tamil matrimony_INNER_468x60.gif
 

No comments:

Post a Comment