Thursday, October 31, 2013
இலங்கை::யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யுமாறு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, வட மாகாண முதலமைச்சர் சி.வீ.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கு விஜயம் செய்வாரா இல்லையா என்பது இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும், மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் இலங்கைக்கு, இந்தியா அழுத்தம் பிரயோகித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாக விக்னேஸ்வரன் தெரிவத்துள்ளார். கொழும்பைப் போன்றே யாழ்ப்பாணத்துடனும் இந்தியா உறவுகளைப் பேண வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment