Thursday, October 31, 2013
இலங்கை::ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேருக்கு வருகின்ற நவம்பர் 13ம் தேதி வரை காவலை நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மீனவர்கள் 4 பேரும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கச்சத்தீவில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டனர். காரைக்கால் மீனவர்கள் 32 பேரின் காவலும் நவம்பர் 14ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. காரைக்கால் மீனவர்கள் 32 பேரும் திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டனர்
No comments:
Post a Comment