Thursday, October 31, 2013
இலங்கை::சிறுவர் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடையவர்களின் பட்டியலை தயாரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தீர்மானித்துள்ளது.
அண்மையில் தயாரிக்கப்பட்ட தேசிய சிறுவர் கொள்கைகளுக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவர்களின் பட்டியலை தயாரிக்கவுள்ளதாக அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அனோமா திஸாநாயக்க குறிப்பிட்டார்.
சிறார்களை பாதுகாக்கும் நோக்கில், அபிவிருத்தியடைந்த நாடுகளில் இவ்வாறான பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
விரைவில் இதனை சட்டமாக்குவதற்கு அமைச்சரவையில் சமர்ப்பித்து, அமைச்சரவையின் அனுமதியை பெற்றுக்கொள்ள எண்ணியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான பட்டியலில் உள்வாங்கப்படும் நபர்கள் சிறார்கள் சம்பந்தமான தொழில்கள் எதிலும் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அனோமா திஸாநாயக்க மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment