Wednesday, October 30, 2013
திருப்பதி::ஆந்திராவில் இன்று அதிகாலை, ஆம்னி பஸ்சின் டீசல் டேங்க் திடீரென வெடித்ததால் பஸ் தீக்கிரையானது. பஸ்சில் பயணம் செய்த 42 பேர் உடல் கருகி இறந்தனர். இந்த கோர விபத்து ஆந்திராவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரில் இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்தை சேர்ந்த சொகுசு பஸ், பெங்களூரிலிருந்து நேற்றிரவு ஐதராபாத் நோக்கி சென்றது. இந்த பஸ்சில் டிரைவர், கண்டக்டர் உள்பட 36 பேர் பயணம் செய்தனர். வழியில் ஆங்காங்கே சில பயணிகள் பஸ்சில் ஏறிக் கொண்டனர். அதிகாலை 5 மணியளவில் ஆந்திர மாநிலம், மெகபூப் நகர் பஸ் நிலையத்தில் 4 பயணிகள் இறங்கினர். பஸ் மீண்டும் புறப்பட்டு சென்றது. கொத்தகோட்டா மண்டலம், பாளையம் கிராமம் அருகே ஐதராபாத்&பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 5.30 மணியளவில் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே வேகமாக ஒரு கார் வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க டிரைவர், பஸ்சை இடதுபுறமாக திருப்பினார். வேகமாக திருப்பியதில் சாலையோர கல்வெட்டின் மீது பஸ்சின் டீசல் டேங்க் மோதியது. இதில் டீசல் டேங்க் பயங்கரமாக வெடித்தது. இதனால் பஸ் தீப்பிடிக்கத் தொடங்கியது. உடனே டிரைவர் வண்டியை நிறுத்த முயன்றார். முடியாமல் போகவே கீழே குதித்தார். ‘பஸ்சில் தீப்பிடித்துள்ளது, எல்லோரும் சீக்கிரம் இறங்குங்கள்’ என்று சொன்னபடியே கண்டக்டரும் கீழே குதித்து விட்டார்.
பஸ்சில் பயணிகள் தூங்கிக் கொண்டிருந்தனர். இதனால், கண்டக்டர் சொன்னதை கவனிக்கவில்லை. சில நொடிகளில் பஸ் முழுவதுமாக தீப்பிடித்து மளமளவென எரிந்தது. சூடு தாங்காமல் விழித்த பயணிகள், பஸ்சுக்குள் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். 3 பயணிகள் மட்டும் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்தனர். அப்பகுதி மக்கள் ஓடிவந்து பயணிகளை மீட்க முயன்றனர். அதற்குள் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் யாராலும் பஸ்சின் அருகில் நெருங்க முடியவில்லை.
இதற்கிடையில் பஸ் டிரைவர், கண்டக்டர் ஆகியோர் தீக்காயங்களுடன் அருகே உள்ள கொத்தகோட்டா காவல் நிலையத்துக்கு சென்று தகவலை கூறி சரண் அடைந்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மெகபூப் நகரில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. ஆனால், அதற்குள் பஸ் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. பயணிகள் பலர் இருக்கைகளில் கரிக்கட்டையாக இறந்து கிடந்தனர். இந்த கோர விபத்தில் 42 பயணிகள் தீயில் கருகி இறந்துள்ளனர்.
இறந்தவர்களில், ராஜேஷ்(31), சக்திகர்(23), தினேஷ்(30), ஜோதி(33), பிரசாந்த் குப்தா(33), அஜகர்(41), கிருஷ்ணா(36), வெங்கடேஷ்(45), அக்சர் சிங்(48), ரவி (21), ரகுவீர்(33), அமர்(31), அசீஸ்(25), கிரண்(38), போட்டியா(28), கவுரவ் விக்ராந்த் ராய்(40), வெங்கடேஷ்(50), பனிகுமார்(28), ருஜியா(28), வேகவதி(27), மோசின்(21), சந்திரசேகர்(41) என 22 பேரின் அடையாளம் தெரிந்துள்ளது. என்றாலும் இவர்கள் ஊர் விவரமும், மற்றவர்களின் விவரமும் தெரியவில்லை.
தகவலறிந்த ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, படுகாயம் அடைந்த 5 பேரை உடனடியாக மேல்சிகிச்சைக்காக ஐதராபாத்துக்கு கொண்டுவரும்படி உத்தரவிட்டார். விபத்து பற்றி தகவல் அறிந்த பயணிகளின் உறவினர்கள் பெங்களூர், ஐதராபாத்தில் உள்ள டிராவல்ஸ் அலுவலகத்துக்கு தகவல்களை கேட்டு வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment