இலங்கை::இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய மீன்வர்கள் 19 பேர் ஊர்காற்றுறை நீதின்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று ஆஜர் செய்யப்பட்டதை அடுத்தே இந்த மினவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இந்த மீனவர்கள் 19 பேரையும் செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் வைத்து கடற்படையினர் கைதுசெய்திருந்தனர்.
அத்துடன் இந்திய மீனவர்களின் 5 மீன்பிடி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன.
இந்த மீனவர்கள் நேற்றைய தினம் வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ். பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயராதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விடுதலை செயயப்பட்ட மீனவர்கள் 19 பேரும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய தூதரகத்தின் பொறுப்பில் உள்ளதாகவும் அந்த பொலிஸ் உயரதிகாரி தெரிவித்தார்.
No comments:
Post a Comment