Monday, September 2, 2013

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்காவிற்கு தகுதியில்லை: பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ!

Monday, September 02, 2013
இலங்கை::இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்காவிற்கு தகுதியில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். உலகின் பல பகுதியில் அமெரிக்கப் படையினர் உலகின் பல பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக் குற்றம் சுமத்தியுள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக இரண்டு தடவைகள் அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறான குற்றச்சாட்டுக்களை நவனீதம்பிள்ளை சுமத்தினாலும், நாட்டின் மெய்யான நிலைமைகளை அறிந்து கொள்வதற்கு இந்த விஜயம் ஏதுவாக அமைந்தது என ஆவர் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.
 
சில தரப்பினர் நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கு தொடர்ந்து போராடி வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் நவனீதம்பிள்ளை அரசியல் பேசியதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத தரப்பினரின் சார்பில் நவனீதம்பிள்ளை செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
 
பிரபாகரனை பயங்கரவாதி எனக் குறிப்பிட தயங்கும் தரப்பினர் ஜனாதிபதியை சர்வாதிகாரி எனக் குறிப்பிடுகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment