Sunday, September 01, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளில் இலங்கை எதிர்வரும் காலங்களில் கூடுதல் பங்களிப்பு வழங்கும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார். 5000 படையினரை அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்சார் இராணுவம் என்ற ரீதியில் அமைதி காக்கும் பணிகளில் இலங்கை இராணுவம் கூடுதல் பங்களிப்பு வழங்க உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அதிகளவான படையினரை அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடுத்தும் முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த 900 படையினர் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்கத்கது. ஹெய்ட்டி மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் அமைதி காக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பயங்கரவாதத்தை இல்லாதொழிப்பது எவ்வாறு என்ற மிகப் பெரிய பாடத்தை இலங்கை இராணுவம் உலகிற்கு உணர்த்தியுள்ளதாகத் தெரிவித்தள்ளார். மூன்று தசாப்தமாக நீடித்த யுத்தத்தை இல்லாதொழித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த உலக அளவில் இலங்கை இராணுவம் சரித்திரம் படைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment