Sunday, September 01, 2013
இலங்கை::ஐ. நா. மனித உரிமை ஆணையம் போன்ற மகி மைமிக்க உயர் நிறுவனத் திடம் புலிகள் போன்ற இரக்கமற்ற அமைப்புக்க ளுக்கு மரியாதை இருக்கும் என்று புலம்பெயர் தமிழர் கள் எதிர்பார்க்க முடியாது என ஐ. நா. மனித உரிமை கள் ஆணையாளர் நவநீ தம்பிள்ளை தெரிவித் துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜய மொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நவநீதம்பிள்ளை நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு விஜயம் செய்ய விடுக்கப்பட்ட அழைப்புக்கும் தந்த ஒத்துழைப்புக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறிய நவி பிள்ளை, ஒரு நாட்டில் நீண்ட நாள் பயணமாக சென்றமையும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் இலங்கையில் தான் எட்டு வெவ்வேறுபட்ட தரப்பினை சந்தித்து கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கோரிக்கை விடுத்த அனைவரையும் சந்திக்க முடியாது போனமைக்கு வருந்துகிறேன். இலங்கை விஜயம் குறித்து செப்டெம்பரின் இடைக்கால அறிக்கையையும் மார்ச் மாதத்தில் முழு அறிக்கையும் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன்.
இந்திய பாரம்பரியத்தில் இருந்து வந்தவர் நான் என்பதால் விடுதலைப் புலிகளின் சார்பு கருவி என சில ஊடகங்கள் விவரித்தன. அவர்களால் காசு கொடுக்கப்பட்டவள் நான் எனவும் தமிழ் பெண் புலி எனவும் கூறினர். அது தவறானது.
மிக ஆழமான தாக்குதல் ஆகும்.ஆனால் நான் ஒரு தென்னாபிரிக்கர். அதனையிட்டு பெருமிதம் அடைகிறேன் என்பதை முதலில் கூற வேண்டும். பல உயிர்களை கொன்றழித்த இரக்கமற்ற அமைப்பே புலிகள் அமைப்பாகும்.
நீலன் திருச்செல்வத்தையும் அவர்கள் கொலை செய்தனர். இப்படியான இரக்கமற்ற அமைப்புக்கு மகிமைமிக்க அமைப்பில் மரியாதை இடமுண்டென புலிகளிடம் பணம் பெற்று வரும் புலம்பெயர் அமைப்புக்கள் எதிர்பார்க்க முடியாது.
30 வருட யுத்தத்தில் உயிர் பலிகொடுத்த அனைத்து இலங்கையர்களையும் நான் மதிக்கிறேன். அவர்களுடைய குடும்பங்களுக்கு நான் அனுதாபத்தை தெரிவிக்க விரும்புகிறேன். அந்த இழப்பை அவர்களால் ஈடுசெய்துகொள்ள முடியாது. மோதல் முடிவடைந்தும் துன்பம் தீரவில்லை.
வடக்கு தேர்தல் அறிக்கை நான் வரவேற்கிறேன். அமைதியான நீதியான சூழலில் தேர்தல் நடக்கும் என நான் நம்புகிறேன். அதிகார பகிர்வுக்கு அது புதிய கட்டமாக அமையும்.
ஒரே இரவில் இராணுவத்தை குறைத்துவிட முடியாது என்ற பாதுகாப்பு செயலரின் கருத்தை நான் ஏற்கிறேன்.
இவ்வாறு நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment