Friday, August 30, 2013
இலங்கை::புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் குறித்து எந்த தகவலும் இல்லை என்று இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணம் சென்றிருந்த ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையைச் சந்தித்த, எழிலனின் மனைவி அனந்தி சசிதரன், போரின் முடிவில் அவரை தாம் சிறிலங்காப படையினரிடம் கையளித்ததாக கூறியிருந்தார்.
2009 மே 18ம் நாள் நூற்றுக்கணக்கானோருடன் எழிலன் சரணடைந்தார் என்றும் அதன் பின்னர், அவரது நிலை தெரியவில்லை என்றும் அனந்தி தெரிவித்திருந்தார்.
எழிலன் உயிருடன் இருப்பதாக தான் நம்புவதாகவும், எங்காவது இரகசிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய,
அனந்தியின் கணவர் குறித்து எந்தத் தகவலும் இல்லை.
புனர்வாழ்வுக்குப் பின்னர் விடுதலை செய்யப்பட்டவர்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பட்டியல்கள் உள்ளன.எல்லோருடைய தகவல்களும் அதில் பதிவாகியுள்ளன.எவரேனும் அதை காவல்துறையிடம் பெற்றுக் கொள்ளலாம்.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment