Saturday, August 31, 2013
இலங்கை::தமிழர்களிடம் ஆயுதங்கள் இருந்தால் தான் சமஷ்டி தீர்வு ஒன்றை தமிழ் மக்கள் ஏற்படுத்துவதற்கான பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சமஷ்டித் தீர்வை விட கூடுதலான தீர்வை நோக்கிக் கூட நாம் பேச்சு வார்த்தைகளை நடத்தலாம் என்று தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன், எங்களிடம் கைவசம் ஆயுதங்கள் இல்லாவிட்டால் எங்களுக்கு எதுவுமே நடக்காது என்று கூறினார்.
மன்னார் பொது மைதானத்தில் நடை பெற்ற வட மாகாண சபைக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்குரார்ப் பண கூட்டத்தில் உரையாற்றும் போதே சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்தக் கருத்தை வெளியிட்டார். வடமாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் முதன்மை வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் உட்பட கூட்டமைப்பின் சகல வேட்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் கலந்து கொண்டார். தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் இன்னுமொரு உறுப்பினரான பி. அரியநேந்திரன் தமது உரையில், செல்வ நாயகம் அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சி னைக்கு தீர்வு காணும் போராட்டத்தை தொடர்ந்தும் மேற்கொண்டார் என்றும், இதன் மூலம் முழுமையான ஆயுதப் போரா ட்டம் ஒன்று உருவெடுத்தது என்றும் கூறினார்.
ஆயுத போராட்டம் பிரபாகரன் காலத்திலும் தொடர்ந்து நடைபெற்றது. ஆனால் இன்று நாம் எவ்வித உரிமையும் பெறாத நிலையில் இருக்கிறோம் என்று திரு. அரியநேந்திரன் தெரிவித்தார்.ஆகவே தமிழ் மக்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கக் கூடிய வகையில் வாக்களிக்கும் கடப்பாடு இருக்கிறது என்று தெரிவித்த அவர் இதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை இந்த வெற்றி பறைசாற்றும் என்றும் இதன் மூலம் நாம் வேண்டியதை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் ஏற்படும் என்றும் கூறினார்.
30 ஆண்டு கால புலிபயங்கரவாத யுத்தத்தின் பின்னர் மக்களை அடிமைப்பிடியில் இருந்து விடுவித்து சமாதானமும் அமைதியும் நிலைநாட்டப் பட்டுள்ள இன்றைய மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் இவ்விதம் தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பினர் சமாதானத்தை சீர்குலைக்கக்கூடிய வகையில் பேசி வருவதை பொறுப்பு வாய்ந்த ஊடகவிய லாளர்கள் கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
இதுபற்றி அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் இவ்விதம் பேசுவதன் மூலம் நாட்டில் உள்ள சமாதானத்தை விரும்பும் மக்கள் மனதில் சந்தேகமும் அச்சமும் ஏற்பட்டுள்ளது என்று கூறினார். எனவே பொது மக்கள் இத்தகைய கருத்துக்களை தெரிவிக்கும் தீவிரவாத அரசியல் குழுக்களின் நோக்கங் களைப் புரிந்து கொண்டு அவர்களின் அரசியல் பிரசாரங்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment