Monday, August 12, 2013

மைக்ரோசொப்ட்” முன்னாள் அதிகாரியின் விமானம் வீடுகளின் மேல் வீழ்ந்தது: நால்வர் பலி!!

Monday, August 12, 2013
US::அமெ­ரிக்­காவில் விமா­ன­மொன்று வீடு­களின் மீது வீழ்ந்து நொருங்­கி­யதால், மைக்­ரோசொப்ட் நிறு­வ­னத்தின் முன்னாள் நிறை­வேற்று அதி­கா­ரி­களில் ஒரு­வ­ரான பில் ஹென்­னிங்ஸ்கார்ட், அவரன் 17 வயது மக­னான மெக்ஸ்வெல் உட்­பட நால்வர் இறந்­துள்­ளனர். பில் ஹென்­னிங்ஸ்கார்ட் செலுத்திச் சென்ற 10 ஆச­னங்கள் கொண்ட விமா­ன­மொன்றே கெனக்­டிகட் மாநி­லத்தில் கடந்த வெள்­ளி­யன்று விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ளது. இவ்­வி­பத்தில் இரு வீடுகள் சேத­ம­டைந்­த­துடன் வீட்­டுக்­குள்­ளி­ருந்த ஒரு வயது குழந்­தையும் 13 வயதான சிறுவன் ஒருவனும் இறந்துள்ளனர்.

No comments:

Post a Comment