Monday, August 12, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்குத் தேர்தல் விடயத்தில் இனவாத பாதையில் பயணிக்காமல் அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்து கவனம் செலுத்தவேண்டும்: திஸ்ஸ விதாரண!

Monday, August 12, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்குத் தேர்தல் விடயத்தில் இனவாத பாதையில் பயணிக்காமல் அரசாங்கத்துடன் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படுவது குறித்து கவனம் செலுத்தவேண்டும். இனவாத செயற்பாட்டிலிருந்து கூட்டமைப்பு மீளவேண்டும் என்று லங்கா சம சமாஜ கட்சியின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
 
வடக்குத் தேர்தல் விடயம் குறித்தும் பிரசார செயற்பாடுகள் தொடர்பாகவும் அமைச்சர் திஸ்ஸ விதாரண மேலும் கூறியதாவது:-
 
வடக்குத் தேர்தல் என்பது மிகவும் முக்கியத்துவமிக்கதாகும். வடக்கில் பல தசாப்தங்களின் பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடைபெறுகின்றமை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
 
எனினும் வடக்குத் தேர்தல் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாதத்தை கையில் எடுத்து செயற்படுவதாக தெரிகின்றது. இது ஆரோக்கியமான விடயமாக அமையாது. வடக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு பதிலாக கூட்டமைப்பு இனவாத செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.
 
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாத செயற்பாடுகளை விடுத்து அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்து செயற்படவேண்டியது அவசியமாகும். தற்போதைய நிலைமையில் கூட்டமைப்பு இனவாத இடத்தில் இருப்பதாகவே தெரிகின்றது. எனவே அதனைவிட்டு விலகி கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இணைந்து
செயற்பட முன்வரவேண்டும்.

No comments:

Post a Comment