Friday, August 30, 2013
இலங்கை::கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த வலியுறுத்தியுள்ள ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மனித உரிமை மீறல் விடயங்களுக்கெதிராக அரசு மேற்கொண்டுள்ள சட்ட நடவடிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை::கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்த வலியுறுத்தியுள்ள ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை மனித உரிமை மீறல் விடயங்களுக்கெதிராக அரசு மேற்கொண்டுள்ள சட்ட நடவடிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆறுநாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸுக்குமிடையிலான விஷேட சந்திப்பொன்று நேற்று வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்றது. இதன்போதே நவநீதம்பிள்ளை நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை அமுல் செய்வது மற்றும் மனித உரிமைகள் விடயங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
சமயங்களுக்கிடையிலான குரோத மனப்பாங்கை வளர்க்கும் செயற்பாடுகள்இ கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரம்இ சட்டம் ஒழுங்கு தொடர்பான புதிய அமைச்சின் உதயம் பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்பிலும் இதன்போது நவநீதம்பிள்ளை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த விடயங்களுக்கு பதிலளித்துள்ள அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சர்வதேச நாடுகள் சில இலங்கைக்கு எதிராக கொண்டுள்ள நிலைப்பாடுகளை விமர்சித்ததுடன் மனித உரிமை மீறல் விடயங்கள் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்தார். அத்துடன் நீதித்துறை தொடர்பில் எழுப்பப்பட்டு வரும் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆதாரங்களின் அடிப்படையில் எந்தவித தகுதி தராதரங்களும் பாராது நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொல்லப்பட்டமை, அரச சார்பற்ற நிறுவன ஊழியர்களின் படுகொலை தொடர்பிலான விசாரணைகளை சுட்டிக்காட்டிய அமைச்சர் சாட்சிகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பாக தொடுக்கப்பட்ட வினாவுக்கு பதிலளித்த அமைச்சர் 30 வருடங்களாக அமுலிலுள்ள குறித்த சட்டமானது திருத்தப்பட்ட நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்தப்படுவதாகவும் அதனை அரசு ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்யப்போவதில்லையென்றும் உறுதியளித்தார்.
கம்பஹா, வெலிவேரிய பகுதியில் பொது மக்கள் ஆர்ப்பாட்டம்மீது இராணுவம் மேற்கொண்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. குறித்த சம்பவம் தொடர்பில் பல் ேவறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெறுவதாக மனித உரிமைகள் ஆணையாளரிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அது தொடர்பில் காலம் தாழ்த்தாது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அத்துடன்இ கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் விவகாரப் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர் உறுதியளித்தார்.
இதேவேளை பொலிஸ் திணைக்களம் சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டமை தொடர்பில் நவநீதம்பிள்ளை அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் 2002 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டுவரை பொலிஸ் திணைக்களம் உள்துறை அமைச்சின் கீழ் செயற்பட்டதை சுட்டிக்காட்டியதுடன் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாகவே அது தற்போது சட்டம் ஒழுங்கு என்ற புதிய அமைச்சின் கீழ் கொண்டுவந்ததாக சுட்டிக்காட்டினார்.
எனினும் பொலிஸ் திணைக்களத்தை நீதியமைச்சின் கீழ் வைத்திருக்கலாம் என ஆலோசனை தெரிவித்த நவநீதம் பிள்ளை சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் அதனை கொண்டுவந்ததற்கு தனது அதிருப்தியை தெரிவித்தார்.
No comments:
Post a Comment