Tuesday, July 02, 2013
இலங்கை::வெலிக்கடைச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கைதிகள் அந்நாட்டு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர், பதினொரு தமிழக கைதிகளே இவ்வாறு இந்தியாவிற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.
போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக குறித்த தமிழகப் பிரஜைகளுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2010ஆம் ஆண்டில் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டது. இலங்கையில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகின்றது.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் கைதிகளை பரிமாறிக்கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. குறித்த தமிழக கைதிகளுக்கான தண்டனை குறைக்கப்படாது என்ற போதிலும் தமிழக சிறைகளில் தண்டனை அனுபவி;த்தால் அவர்களது குடும்ப உறுப்பினர்களினால் அவர்களை பார்வையிட சந்தர்ப்பம் கிட்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் குறித்த கைதிக
ளை இடமாற்றம் செய்ய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.போதைப் பொருள் கடத்திய குற்றத்திற்காக குறித்த தமிழகப் பிரஜைகளுக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2010ஆம் ஆண்டில் இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டது. இலங்கையில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகின்றது.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் கைதிகளை பரிமாறிக்கொள்ளக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. குறித்த தமிழக கைதிகளுக்கான தண்டனை குறைக்கப்படாது என்ற போதிலும் தமிழக சிறைகளில் தண்டனை அனுபவி;த்தால் அவர்களது குடும்ப உறுப்பினர்களினால் அவர்களை பார்வையிட சந்தர்ப்பம் கிட்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் குறித்த கைதிக
No comments:
Post a Comment