Tuesday, July 2, 2013

35,000 அடி உயரத்தில் விமானத்தின் கதவை திறக்க முயன்ற இலங்கை வீரர்.. நடுவானில் பரபரப்பு!!!

Tuesday, July 02, 2013
லண்டன்:இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவர் 35 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது குடிபோதையில் விமானத்தின் கதவை திறக்க முயன்றதால் நடுவானில் பரபரப்பு ஏற்பட்டது.
 
இங்கிலாந்தின் செயின்ட் லூயிஸிலிருந்து காட்விக் நோக்கி பிரிட்டிஷ் ஏர்வேஸின் போயிங் 777 ரக விமானம் பறந்து கொண்டிருந்தது. இதில் இலங்கை கிரிக்கெட் வீரர்களும் பயணித்துள்ளனர். நடுவானில் 35 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது திடீரென இலங்கை கிரிக்கெட் வீரர் ஒருவர் எழுந்தார். அவர் குடிபோதையில் தடுமாறிய நிலையில் திடீரென விமானத்தின் கதவை திறக்க முயன்றார்.
 
இதைப் பார்த்த பயணிகளும் விமான பணியாளர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதர இலங்கை கிரிக்கெட் வீரர்களும் அந்த வீரரை சமாதானப்படுத்தி இருக்கையில் அமர வைத்தனர். பின்னர் தாம் கழிப்பறை என விமானத்தின் கதவை திறக்க முயன்றேன் என்று போதையிலேயே அந்த வீரர் கூறியுள்ளார். நடுவானில் நடந்த இந்த சம்பவத்தால் சக பயணிகள் மரணபீதியில் உறைந்து போயினர்.

No comments:

Post a Comment