Tuesday, July 02, 2013
சென்னை::வெஸ்ட்இண்டீசில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 3வது லீக் போட்டியில், இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.
கிங்ஸ்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) இப்போட்டி நடைபெறுகிறது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலாக இருந்தது. ரோகித் ஷர்மா, சுரேஷ் ரெய்னா மட்டுமே ஓரளவு ரன் சேர்த்தனர்.
இந்திய அணியின் பந்து வீச்சு நன்றாக உள்ளது. காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்ட இந்திய அணி கேப்டன் டோனி 3 நாடுகள் போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது இந்திய அணிக்கு பெருத்த பின்னடைவாகும். இலங்கை அணியில் ஜெயவர்த்தனே, கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோரின் பேட்டிங் மட்டுமே முதல் ஆட்டத்தில் எடுபட்டது. மலிங்கா, அஜந்தா மென்டிஸ் பந்து வீச்சு எதிர்பார்ப்புக்கு ஏற்ப அமையவில்லை.
இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணியில் தோல்வியை தழுவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை டென் கிரிக்கெட் மற்றும் தூர்தர்ஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

No comments:
Post a Comment