Tuesday, July 2, 2013

யுத்தத்தின் பின்னரான இலங்கைக்கு சர்வதேச சமூகம் போதியளவு வழங்க வேண்டும்: கார்ல் ரைட்!

Tuesday, July 02, 2013
இலங்கை::யுத்தத்தின் பின்னரான இலங்கைக்கு சர்வதேச சமூகம் போதியளவு ஆதரவினை வழங்க வேண்டுமென பொதுநலவாய நாடுகள் உள்ளுராட்சி அமைப்பின் செயலாளர் நாயகம் கார்ல் ரைட் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தொடர்பில் ஆக்கபூர்வமான விமர்சனங்களை வெளியிட்டு போதியளவு உதவிகளை வழங்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பல தசாப்த யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள வடுக்களை ஆற்றுவதற்கு உதவிகள் வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

 இலங்கையை புறக்கணிப்பதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment