Monday, July 01, 2013
சென்னை::தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல்வராக வேண்டும் என ஆசைப்படுகிறார். அவரால் முதல்வராக முடியாது. அவருக்கு அதற்கான ஆற்றலும், துணிவும் இல்லை என்று சமத்துவ மக்கள் கட்சி நிறுவனர் சரத்குமார் கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட சமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் சனிக்கிழமை நடைபெற்றது. கிழக்கு மாவட்டச் செயலர் அரசன் பொன்ராஜ் தலைமை வகித்தார். மேற்கு மாவட்டச் செயலர் சுரேஷ் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் சரத்குமார் எம்எல்ஏ பேசியதாவது, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்புடைய கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடச் செய்து வெற்றிபெற்றுள்ளது திமுக. அக் கட்சியில் போட்டியிட வேறு யாரும் இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல்வராக வேண்டும் என ஆசைப்படுகிறார். அவரால் முதல்வராக முடியாது. அவருக்கு அதற்கான ஆற்றலும், துணிவும் இல்லை.
தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா நல்லாட்சி நடத்தி வருகிறார். அவரது ஆட்சிக்கு நாம் உறுதுணையாக இருக்கிறோம். மக்களவைத் தேர்தலில் முதல்வரின் தலைமையில் தேர்தலைச் சந்திப்போம் என்று சரத்குமார் கூறினார்.
கூட்டத்தில், ஜூலை 28 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் கட்சியின் முப்பெரும் விழாவில் இம் மாவட்டத்திலிருந்து திரளான தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
மாநில துணைத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், கொள்கை பரப்புச் செயலர் ஜெயப்பிரகாஷ், தென்மண்டல அமைப்புச் செயலர் சுந்தர், மாநில துணைப் பொதுச் செயலர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment