Monday, July 01, 2013
இலங்கை::வடக்கு கிழக்கு மாகாண சிறார்களுக்கும் இரண்டு கல்வி நிலையங்களுக்கும் உதவும் வகையில் மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை ஒழுங்கு செய்திருந்தார்.
எனது பாடசாலையை கட்டியெழுப்ப உதவுவேன் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் வடமாகாணத்திலுள்ள கிளிநொச்சி மாவட்ட நாகேஸ்வர மஹா வித்தியாலயம், முல்லைத்தீவு மாவட்ட தன்டுவன் அரச தமிழ் பாடசாலை என்பன மேம்படுத்தப்படவிருக்கின்றன.
இலங்கை தொழிலாளர் நலன்புரி சங்கம் மற்றும் மலேசியாவிலுள்ள இலங்கையர்களின் ஒத்துழைப்புக்களுடன் இந்நிகழ்வு இடம்பெற்றது. மலேசியாவுக்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் லலித்தோலாகல மலேசியர்கள் பெருந் தண்மையுள்ளவர்கள் என குறிப்பிட்டார்.
ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் டொக்டர். சானக ராஜபக்ஷ, வர்த்தக தொழில் நிறுவனங்களை பாராட்டினார். மலேசிய இலங்கை கூட்டமைப்பின் தலைவர் தாடுக் எஸ் குலசேகரன்,மற்றும் பலரும் சமுகமளித்திருந்தர்
No comments:
Post a Comment