Saturday, June 01, 2013
இலங்கை::சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான இராணுவ ஒத்துழைப்பு மேலும் வலுப்படும். இதற்கு ஏற்ற வகையில், இலங்கைக்கு இராணுவ தொழில்நுட்பம் வழங்கப்படும். இலங்கை நாட்டு இராணுவ வீரர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும்' என சீன அரசின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹாங் லீ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சீன விஜயம் தொடர்பில் சீன அரசின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹாங் லீ, நிருபர்களிடம் பேசும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 'இலங்கையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு சீனா 2.2 பில்லியன் டொலர் புதிய கடன் தர முன்வந்துள்ளது.
கண்டியை யாழ்ப்பாணத்துடன் இணைக்கின்ற வகையில் வடக்கு அதிவிரைவு சாலை அமைப்பு பணிக்காக ஒன்றரை பில்லியன் டொலர்கள் (ரூ.8,250 கோடி) முதலீடு செய்ய இலங்கையும், சீனாவும் உடன்பட்டுள்ளன.
தெற்கு ரயில்வேயை விஸ்தரிக்கவும் இரு தரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக வளர்ச்சிக்கும் இரு நாடுகளும் சம்மதித்துள்ளன' என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரஸ் கூறினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சீனப்பயணத்தின்போது, செயற்கை கோள் தகவல் தொழில்நுட்பம், விண்வெளி தொழில்நுட்பம், கடல்சார் தொழில்கள் போன்றவற்றில் இலங்கைக்கு சீனா ஆதரவு தரும் என பிரதமர் லீ கெகியாங் உறுதி அளித்துள்ளார்.

No comments:
Post a Comment