Saturday, June 01, 2013
போனிக்ஸ்:;அமெரிக்காவில் நடுவானில் 2 சிறிய விமானங்கள் மோதி கொண்டதில், 4 பேர் இறந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தீவிர விசாரணை நடத்தும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் மிகப்பெரிய நகரான போனிக்சில் பாலைவனப் பகுதி உள்ளது. இங்கு நேற்று 2 குட்டி விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. அமெரிக்க நேரப்படி காலை 10 மணிக்கு இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. இதில் ஒரு விமானம் வெடித்து சிதறி நடுவானில் தீப்பிடித்து எரிந்து விழுந்தது. மற்றொரு விமானம் விழுந்து நொறுங்கியதை தரையில் இருந்த மற்றொரு பைலட் பார்த்து தகவல் அளித்தார்.
தகவல் அறிந்ததும் போனிக்ஸ் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதுகுறித்து தீயணைப்பு அதிகாரி கூறுகையில், Ôபோனிக்சில் உள்ள டீர் வேலி விமான நிலையத்தில் இருந்து 15 மைல் தூரத்தில் வடகிழக்கு பாலைவனம் பகுதியில் இந்த விபத்து நடந்தது. இதில் 4 பேர் இறந்துள்ளனர். நொறுங்கி விழுந்த விமானத்தில் 2 பேர் சிக்கி படுகாயம் அடைந்துள்ளனர்Õ என்றனர். இறந்தவர்களின் பெயர் விபரம் வெளியிடப்படவில்லை. இதுகுறித்த முதல் கட்ட விசாரணையில், ஒரு இன்ஜின் கொண்ட சிறிய ரக விமானங்கள், வானில் நேருக்கு நேர் மோதிக் கொண்டது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க தேசிய விமான போக்குவரத்து பாதுகாப்பு அதிகாரிகள் விசாரிக்கிறார்கள்.

No comments:
Post a Comment