Monday, May 27, 2013
இலங்கை::நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சீனா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குழுவினருக்கு பீஜிங் சர்வதேச விமான நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
சீன வெளிவிவகார உதவி அமைச்சர் லியூ+ சென்மின் மற்றும் சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் ரஞ்சித உயன்கொட ஆகியோர் ஜனாதிபதி தலைமையிலான குழுவினருக்கு வரவேற்பளித்தனர்.
சீன ஜனாதிபதியின் அழைப்பிற்கிணங்க இடம்பெறும் இந்த விஜயத்தில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம்- பொருளாதாரம்- கலாசாரம் மற்றும் தொழில்நுட்பத் துறை தொடர்புபட்ட விடயங்கள் தொடர்பில் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.
No comments:
Post a Comment