Tuesday, May 28, 2013
இலங்கை::இராணுவத்திலிருந்து தப்பியோடியதாக இராணுவ மோட்டார் படையணியைச் சேர்ந்த வீரர்களுடன் சரத் பொன்சேகா கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாடுபூராவும் சுற்றிவந்தார் என்று ஓய்வுப்பெற்ற பிரிகேடியர் அசோக வீரசிங்க சாட்சியமளித்துள்ளார்.

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவுக்கும் அவருடைய உதவியாளர் சேனக்க ஹரிபிரியவுக்கும் எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது இடம்பெற்ற குறுக்கு விசாரணையிலேயே ஓய்வு பெற்ற பிரிகேடியர் அசோக வீரசிங்க மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.
மேலும் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் தொடர்பில் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவிற்கு அறிவித்ததாகவும், எனினும், அவர்களை கைது செய்வது தொடர்பில் அவர் எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் பிரிகேடியர் அசோக வீரசிங்க சாட்சியமளித்தார்.,
இதனையடுத்து இந்த வழக்கு அடுத்த மாதம் 14ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
No comments:
Post a Comment