Tuesday, May 28, 2013
புதுதில்லி::மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகமுள்ள மாநிலங்களில் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
புதுதில்லி::மாவோயிஸ்ட் ஆதிக்கம் அதிகமுள்ள மாநிலங்களில் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியினர் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகமுள்ள சத்தீஸ்கர், பிகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
மாவோயிஸ்ட் தீவிரவாதத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மாநிலங்களில் கட்சியினரின் நிகழ்ச்சிகளுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். தேசிய மற்றும் மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு தற்போது அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து மறுஆய்வு செய்து கூடுதல் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்களின் சுற்றுப் பயணத்தின்போதும், அவர்கள் பங்கேற்கும் கூட்டங்களுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும். மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தல் மற்றும் வன்முறையால் அரசியல் செயல்பாடுகள் தடைபடக் கூடாது.
அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை ஒருங்கிணைப்பதற்கு போலீஸ் தலைமையகத்தில் ஒரு அதிகாரியை நியமிக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட சரகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி நேரில் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட வேண்டும்'' என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment