Monday, May 27, 2013

பிக்கு தீ குளிக்கவில்லை! கொல்லப்பட்டார்!?

பட விளக்கம்:
1- நீல நிற வாகனத்திற்குள் கமெரா இருக்கின்றது. பிக்கு பீதியுடன் காணப்படுகிறார். அவர் அருகில் வெள்ளை நிற சட்டை அணிந்த நபர்
2- லைட்டரை தீ பற்ற வைக்கிறார்
3- பிக்குவின் உடலில் தீயை திணிக்கிறார்
4- பிக்குவின் ஆடை தீப்பற்றுகிறது.
(படம்: முகநூல்)
 
Monday, May 27, 2013
இலங்கை::கடந்த வெள்ளிக்கிழமை கண்டி தலதா மாளிகை அருகில் போவத்த இந்திரட்ன தேரர் தீக்குளித்ததாக தெரிவிக்கப்பட்ட செய்திகளில் உண்மை இல்லை எனவும், இத்தீக்குளிப்புக்குப் பின்னால் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி இருப்பதும் மக்களை சிந்திக்கவைத்திருக்கின்றன.
 
பெற்றோல் தெரிக்கப்பட்டிருந்த குறித்த பிக்குவை ஓர் வெள்ளை நிற மேல்சட்டை (சேர்ட்) அணிந்த ஒருவர் ‘லைட்டர்’ ஒன்றின் மூலமாக எரிப்பதை புகைப்படங்களும், வீடியோக்களும் தெளிவாக எடுத்துக்காட்டி இருப்பதானது, இது ஒரு நாடகம் என்பதை தெட்டத்தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
 
அரசியல் பின்புலங்கள் இக்கொலைக்குப் பின்னால் இருப்பதாகவும் தெரியவருகிறது. குறித்த பிக்குவை எரிப்பதும், அவரைக் காப்பாற்றாமல், அவர் எரியும் காட்சிகளை திட்டமிட்டு புகைப்படம், வீடியோ எடுத்திருப்பதும் மனித நேயத்துக்கு அப்பாற்பட்ட விடயம் மாத்திரமன்றி, ஊடக தர்மத்திற்கும்  எதிரானவை என குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.
 
எனவே நாட்டிலுள்ள பேரின மக்களை ஒன்றாக இணைப்பதற்கான ஓர் அடிப்படைத் திட்டத்தில் ஓர் பிக்கு இன்று அநியாயமாகக் கொல்லப்பட்டிருக்கின்றார். அவர் கொல்லப்படும் காட்சிகள், புகைப்படங்கள் தெட்டத்தெளிவாக நிரூபித்தும் இருக்கின்றன.
 
எனவே, இக்கொலையைப் புரிந்தவர்கள் சட்டத்தின் முன்னிலையில் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இதன் பின்னணி யார் என்பதை மக்கள் சிந்தித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
 
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னணியிலும் பல
ந்தேகங்கள் எழுகின்றன. குறித்த பிக்குவின் இறுதிக் கிரியைகளை கொழும்பில் ஏற்பாடு செய்து, அதன் மூலமாக ஓர் இனவாதத்தை தூண்ட இதன் பின்னணியில் சில இயக்கங்கள் செல்வாக்குகளுடன் செயற்பட்டு வருவதாகவும் தெரியவருகிறது...

பழுலுல்லாஹ் பர்ஹான்.

No comments:

Post a Comment