Saturday, May 25, 2013
இலங்கை::ஆசியாவிலேயே ஜனநாயக பண்புகளை முழுமையாக பின்பற்றி நிலையான அரசாங்கமொன்றை உருவாக்கியுள்ள நாடு இலங்கைதான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
இலங்கை::ஆசியாவிலேயே ஜனநாயக பண்புகளை முழுமையாக பின்பற்றி நிலையான அரசாங்கமொன்றை உருவாக்கியுள்ள நாடு இலங்கைதான் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.
எதிர்க் கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டு பொறுமையுடன் செயற்படக்கூடிய ஜனநாயக அரசாங்கமொன்று நாட்டில் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, வெவ்வேறு கருத்துக்களுக்கும் இடமளிக்கும் வகையில் பொறுமை காக்கும் நாட்டை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
உலகில் பல நாடுகள் தற்போது தேர்தலுக்காகவே அரசியலை உபயோகப்படு த்துகின்றன என குறிப்பிட்ட ஜனாதிபதி, அரசியலுக்காகவே தேர்தல் உபயோகிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அதேவேளை, பாராளுமன்றம் என்ற கோட்பாட்டை ‘தேர்தல்’ என்ற நோக்கத்துக்காக மட்டும் பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.
மஹரகம இளைஞர் சேவைகள் மன்ற அரங்கில் இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, தேசிய ஒற்றுமையே இளைஞர் பாராளுமன்றத்தின் பிரதான இலக்காக வேண்டும் எனவும் தெற்கிலிருந்து தெரிவான பிரதமரும் வடக்கிலிருந்து தெரிவான பிரதிப் பிரதமரும் இச் சவாலை ஏற்றுக்கொள்ள முடியும் என தாம் நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது :- இளைஞர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைவரும் 18 வயதிலிருந்து 29 வயது வரையிலானவர்கள். இப்பாராளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரை அவர்களின் பலத்தைக் காட்டுகிறது. 1970ஆம் ஆண்டு மே மாதம் இதே போன்று இலங்கை பாராளுமன்றத்திற்கு நான் தெரிவு செய்யப்பட்ட போது எனது வயது 23 தான். பாராளுமன்றம் என்றாலும் சரி, வேறு நிறுவனங்கள் என்றாலும் சரி தலைவர்களாக விரும்புவோர் இளம் பராயத்திலேயே தமக்கான சிறந்த சரிதத்தை கட்டியெழுப்ப வேண்டியது முக்கியம்.
தலைவர்களாக விரும்பும் எவரும் ஊதாரிகளாகவோ மோசடிக்காரர்களாகவோ இருக்கக் கூடாது. அவ்வாறில்லாதவர்களுக்கே சிறந்த எதிர்காலம் உள்ளது. எனது இளம்பராயத்தில் பெளத்த மத குரு ஒருவர் எனக்கு கற்பித்த இந்த வாசகம் இன்றும் என்னால் மறக்க முடியாதது. இது எனது வாழ்க்கைக்கு மிக உறுதுணையானது. அதனையே இளைஞர் பாராளுமன்ற பிரதிநிதிகளுக்கும் கூற விரும்புகிறேன்.
பல கருத்துக்கள் நிலவலாம். எனினும் அவற்றை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இத்தகைய செயற்பாடே நான் சிறந்த அரசியல் பயணத்தை மேற்கொள்ள உதவியது.
சர்வதேச கருத்துக்கள் எவ்வாறாக இருந்தாலும் சிறந்த கல்விமான்கள் எம்மத்தியில் இருந்தனர். அவர்கள் சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களா என்பதைவிட எமக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள் என்பதே முக்கியம்.
நாம் மிக கொடூரமான பயங்கரவாதத்துக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. சர்வதேச ரீதியில் பெரும் அழுத்தங்கள் வந்த போதும் நாம் தெளிவுடன் அவற்றுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்துள்ளோம்.
இப்போதும் எம்மை சர்வதேசம் குற்றவாளிகள் போல் பார்க்கிறது. எனினும் இவை அத்தனையையும் நநாம் நாடின் மீது சுமுத்தியிருந்தால் நாட்டு மக்கள் அதனால் பெரும் குழப்பத்துக்கு உள்ளாகியிருப்பர். அவ்வாறிருந்திருந்தால் எந்த வெற்றியையும் நாம் பெற்றிருக்க முடியாது.
தலைவன் என்பவன் ஏனையவரின் பிரச்சினைகளை தாம் பொறுப்பேற்க வேண்டும். பிரச்சினைகளில் தலைவன் தான் துயரத்தில் அல்லது குழப்பமடைந்திருந்தால் உடனிருப்போர் மேலும் குழப்பமடைவர். ஒருவர் தம்முடைய பிரச்சினைகளை குழப்பமடையாத ஒருவரிடமே கூற முற்படுவர். இதனை சகலரும் உணர வேண்டும்.
இப்போது எமது நாட்டில் நான்கில் ஒரு வீதமானோர் இளைஞர்களாவர். அபிவிருத்தியில் முன்னேறியுள்ள நாடுகள் இளைஞர் பலத்தினாலேயே இலக்கை அடைந்துள்ளன. எமது நாடும் இளைஞர்களைக் கொண்ட நாடு. இதனால் நாட்டின் எதிர்காலத்தை எம்மால் சுபீட்சமானதாக சிந்திக்க முடியும்.
எமது நாடுதான் ஆசியாவிலேயே விகிதாசார தேர்தல் முறையை முதலில் நடைமுறைப்படுத்தியது. பிரிட்டனுக்கு சர்வஜன வாக்கெடுப்பு கிடைத்த சில வருடங்களிலேயே எமக்கும் சர்வஜன வாக்கெடுப்பு கிடைத்தது.
அன்றிலிருந்தே ஆசியாவில் வெற்றிகரமான ஜனநாயகத்தை நாம் நடைமுறைப்படுத்தி வருகிறோம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment