Saturday, May 25, 2013

தலதா மாளிகைக்கு முன்பாக புத்த பிக்கு ஒருவார் தனக்குதானே தீயிட்டு தற்கொலை முயற்சி!

Saturday, May 25, 2013
இலங்கை::நேற்று முப்பகல் வெசாக் பண்டிகையை முன்னிட்டு கண்டி தலதா மாளிகைக்கு வருகை தந்திருந்த பெரும்திரளான மக்கள் முன்னிலையில் புத்த பிக்கு ஒருவர் தனக்குதானே தீயிட்டு குறித்த தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் குறித்த பிக்குவை கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்..
 
ஆடு, மாடுகள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தப் பிக்கு தன்மீது பெற்றோலை ஊற்றி எரித்துக்கொண்டுள்ளார்.
 
மோசமான எரிகாயங்களுக்கு உள்ளான அவரை அருகில் நின்றவர்கள் கண்டி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அவர் பின்னர் கொழும்பு தேசிய மருத்துமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
இலங்கையில் மிருக பலி பூஜைகளைத் தடுக்க வேண்டும் என்று கடந்த காலங்களில் முன்னேஸ்வரம் இந்துக் கோயிலுக்கு முன்னால் பௌத்த பிக்குகள் போராட்டம் நடத்தியிருந்தனர்.
 
அதேபோல ஆடு, மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் சில பௌத்த அமைப்புகள் குரல் கொடுத்துவந்துள்ளன.
 
அங்கு, கடும்போக்கு பௌத்த அமைப்பான பொது பல சேனா கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை கூறிவந்துள்ளது.
 
பௌத்தர்களுக்கு முக்கியமான வெசாக் முழுமதி நாளான நேற்று வெள்ளிக்கிழமை பௌத்த பிக்கு தீக்குளித்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment