Wednesday, May 29, 2013
இலங்கை::தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன், இராணுவத்தினர் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் காரணமாக, அவரின் செயலாளர் மற்றும் தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டு பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்த மனுக்களை சட்டத்தரணி கௌரிசங்கரி தவராசா நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுக்கள் பதில் பிரதம நீதியரசர் சலீம் மர்சூக் மற்றும் கே.ஸ்ரீபவன், பிரியசாத் டெப் ஆகிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதன்போது, கைதான இருவரும் தற்போது பூசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை சந்திப்பதற்கு சட்டத்தரணிகளுக்கு இடமளிக்கப்படாததால் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய நேரிட்டுள்ளதாகவும் (புலிகளின்)சட்டத்தரணி M.A.சுமந்திரன் நீதிமன்றத்தில் விளக்கமளித்தார்.
இராணுவக் குழுக்கள், கிளிநொச்சியிலுள்ள தமிழ் தேசியக் (புலி)கூட்டமைப்பு அலுவலகத்திற்குச் சென்று இராணுவத்திற்கு பெண்கள் சேர்த்துக்கொள்ளப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்ற பாராளுமன்ற
உறுப்பினரின் அலுவலகம் இதுவா, என வினவியதாகவும் அதன் பின்னர் குறித்த இருவரையும் கைது செய்ததாகவும் (புலிகளின்) சட்டத்தரணி சுமந்திரன் தெரிவித்தார்.
அதன் பின்னர் அவர்கள் தொடர்பில் அறிந்துகொள்வதற்கு எவருக்கும் சந்தர்பம் கிடைக்கவில்லை என்றும், உறவினர்கள் அவர்களை சந்திப்பதற்காகச் சென்று விடயங்களை அறிந்துகொண்டதன் பின்னரே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும்(புலிகளின்)சட்டத்தரணி M.A.சுமந்திரன் கூறினார்.
இதுவொரு அடிப்படை உரிமை மீறல் சம்பவம் என்பதால், இதுகுறித்து மனித உரிமைகள் ஆணைகுழுவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, இந்த மனுக்களை விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்ததுடன், தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை சந்திப்பதற்கு சட்டத்தரணிகளுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து, இந்த மனுக்களை டிசம்பர் மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
No comments:
Post a Comment