Wednesday, May 29, 2013

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: சி.பி.ஐ. 5-ந்தேதிக்குள் பதிலளிக்க நோட்டீசு - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு!

Wednesday, May 29, 2013
மதுரை::முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது புலிகளின் மனித வெடிகுண்டால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என மதுரையை சேர்ந்த வக்கீல் சாந்தகுமரேசன் மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ராஜீவ் கொலை வழக்கில் விடை தெரியாத வினாக்கள் அதிகம் உள்ளன. எனவே மீண்டும் விசாரித்தால் முழு விவரம் தெரியவரும். இல்லையெனில் நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் வழக்கை போல ராஜீவ் கொலையும் "மர்ம"மாக இருக்கும்.

இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ. இயக்குநர்கள் கார்த்திகேயன், ரகோத்தமன் போன்றவர்கள் சாந்தன் உள்பட 3 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டியது இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க மத்திய உள்துறை செயலாளர், சி.பி.ஐ. கூடுதல் இயக்குநர், 'ரா' பிரிவு இயக்குநர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

அந்த மனு இன்று நீதிபதிகள் செல்வம், தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பீட்டர் ரமேஷ்குமார் ஆஜராகி வாதாடினார். அதன்பிறகு நீதிபதிகள் இது தொடர்பாக வருகிற 5-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி சி.பி.ஐ. இயக்குநர், வெளியுறத்துறைச் செயலாளர், 'ரா' பிரிவு இயக்குநர் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்தனர்.
tamil matrimony_INNER_468x60.gif

No comments:

Post a Comment