Monday, May 27, 2013

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்படுகின்றது: சம்பிக்க ரணவக்க!

Monday, May 27, 2013
இலங்கை::இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் இலங்கை அரசாங்கத்திற்கு எந்த தகவல்களையும் வழங்காது, வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், திட்டங்களை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
 
திருகோணமலையில் அமெரிக்காவின் கோனர் என்ற தகவல் நிலையம் திறக்கப்பட்டமை தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். இந்த தகவல் நிலையம் திறக்கப்படுவது குறித்து இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம், வெளிவிவகார அமைச்சுக்கோ, பாதுகாப்பு அமைச்சுக்கோ எந்த தகவல்களையும் வழங்கவில்லை.  இதனடிப்படையில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் வியன்னா இணக்கப்பாடுகளை மீறி செயற்பட்டுள்ளதாகவும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.
 
திருகோணமலையில் திறக்கப்பட்டுள்ள  தகவல் நிலையத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க தூதரகம் உடனடியாக இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறான திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் முன்னர், இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்க வேண்டியது அமெரிக்க அரசாங்கத்தின் கடமை.  
 
இந்த தகவல் நிலையத்தி;ன் ஊடாக முன்னெடுக்கப்பட உள்ள விடயங்கள் குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை.  இதன் ஊடாக இலங்கை தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும். அமெரிக்க தூதரகம் இந்த திட்டம் தொடர்பாக திருகோணமலை நகர சபையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டுள்ளது. மத்திய அரசாங்கத்திற்கு தெரியாமல் உள்ளுராட்சி அமைப்பொன்று அமெரிக்க இவ்வாறான உடன்படிக்கைகளில் கையெழுத்திட முடியாது. இது ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச இணக்கப்பாடுகளுக்கும், சட்டங்களுக்கும் முரணானது எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment