Monday, May 27, 2013
இலங்கை::பௌத்த சாசன அமைச்சு பௌத்த மக்களுக்கு உரிய முறையில் சேவையாற்றத் தவறியுள்ளதாக பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தேஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இலங்கை::பௌத்த சாசன அமைச்சு பௌத்த மக்களுக்கு உரிய முறையில் சேவையாற்றத் தவறியுள்ளதாக பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தேஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த விடயம் குறித்து தீர்மானம் எடுக்க வேண்டிய தருணம் உருவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பௌத்த அமைப்புக்களின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
இதன்போது அவர் தொடர்ந்து கூறுகையில்,
பௌத்த சாசன அமைச்சைப் பாதுகாக்கும் பொறுப்பை பாதுகாப்புச் செயலாளரே சிறந்த முறையில் நிறைவேற்றுவார் என பொது பல சேனா நம்புகின்றது.தற்போது உள்ள பௌத்த சாசன அமைச்சில் இருந்து பௌத்தத்தை பாதுகாக்கும் ஒரு பயனுள்ள சேவை எதிர்பார்க்க முடியாது. அது பல மத அமைச்சின் நிலைக்கு வந்துவிட்டது, அது உண்மையான சிங்கள பௌத்தர்களின் பிரச்சினைகளை புறக்கணிக்கிறது.
பௌத்த சாசன அமைச்சின் நடவடிக்கைகள் குறித்து ஒரு வார காலத்திற்குள் தீர்மானம் எடுக்கப்படும்.சிங்கள பௌத்தர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கட்சி பே
ச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment