Monday, May 27, 2013

தீ மூட்டிக்கொண்டு மரணமான தேரரது இறுதி கிரியைகளுக்கு விசேட பாதுகாப்பு!

Monday, May 27, 2013
இலங்கை::தீ மூட்டிக்கொண்டு மரணமான போவத்தே இன்தரதன்ன தேரரது உயிர் பலிக்கு அரசாங்கம் பொறுப்பு கூறவேண்டும் என்று தேசிய சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
 
சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் பஸ்சரமுல்லே தயாவங்ச தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.
 
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேரர், போவத்தே இன்தரதன்ன தேரரது மரணத்திற்கு ஆளும் தரப்பினரே பொறுப்பேற்க வேண்டும் என குறிப்பிட்டார்.
 
தேரரது கோரிக்கைக்கு செவிசாய்க்காததன் காரணமாகவே அவர் இவ்வாறு தமது உயிரை மாய்த்துக் கொண்டார்.
 
இந்த நிலையில் எதிர்காலத்தில் மிருகவதை தொடர்பான சட்ட மூலம் திருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
இதனிடையே, போவத்தே இன்தரதன்ன தேரரது இறுதி கிரியைகள் கஹாவத்தையில் இடம்பெறவுள்ளது.
 
இறுதி கிரியைகளின் போது விசேட காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment