Thursday, May 30, 2013

பாகிஸ்தானைச் சேர்ந்த ஓரினச்சேர்க்கை பெண்கள் ஜோடி இங்கிலாந்தில் தஞ்சம்!!

Thursday, May 30, 2013
பெமிங்ஹாம்::கடும் எதிர்ப்புகளையும் மீறி இங்கிலாந்தில் திருமணம் செய்துகொண்ட பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் ஓரினச்சேர்க்கையாளர் ஜோடி, தங்களுக்கு தஞ்சம் அளிக்கும்படி இங்கிலாந்து அரசிடம் மனு அளித்துள்ளனர்.

பாகிஸ்தானின் லாகூர் பகுதியை சேர்ந்த பெண்களான ரிஹானா கவுசர் (34), சோபியா கமர் (29) ஆகியோர் இங்கிலாந்தில் உள்ள பெமிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்கள் ஒரு வருக்கொருவர் அறிமுகம் ஆனார்கள். பின்னர் அடிக்கடி நிகழ்ந்த சந்திப்பின் விளைவாக பழக்கம் நெருக்கம் ஆனது. இதனை யடுத்து,
தெற்கு யார்க்ஷைர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் இவர்கள் ஜோடியாக வாழ்ந்தனர்.
ஓரினச்சேர்க்கையாளர் திருமணம் செய்து கொள்ள பாகிஸ்தான் அரசின் சட்டங்கள் அனுமதிப்பதில்லை. மேலும் இவ்வகையிலான உறவு குற்றமாகவும் கருதப்படுகிறது. அதனால் ரிஹானா–சோபியா இணையரின் இல்லறத்துக்கு பாகிஸ்தானில் வசிக்கும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவர்களின் நெருக்கத்தைப் பற்றி அரைகுறையாக அறிந்த இங்கிலாந்து முஸ்லிம் களும் ரிஹானாவும் –சோபியாவும் உடனடியாக பிரிந்துவிட வேண்டும், இல்லை என்றால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதனை யடுத்து, இம்மாதத்தின் முதல் வாரத்தில் அவர்கள் திரு மணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இந்த திருமணத்தை நடத்தி வைக்க இஸ்லாமிய மதகுரு யாரும் முன் வராததால் அவர்கள் பதிவு திருமணம் செய்து கொண்டனர். திருமண சான்றிதழை இங்கிலாந்து குடியுரிமை அதிகாரிகளிடம் சமர்ப்பித்த ரிஹானா – சோபியா ஜோடி தங்களுக்கு இங்கிலாந்தில் வசிக்கும் நிரந்தர குடியுரிமை வழங்க வேண்டும் என மனு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment