Monday, May 27, 2013
இலங்கை::யாழ்ப்பாணத்தில் புதிய இராணுவ குடியிருப்புகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ முகாம்களில் மூன்றை மாத்திரம் வைத்து கொண்டு ஏனைய முகாம்கள் இருந்த இடங்களில் இராணுவ குடியிருப்புகளை ஏற்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அகற்றப்பட உள்ள முகாம்கள் இருந்த காணிகள், அவற்றின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும் பலாலி இராணுவ முகாம் அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண இராணுவத் தலைமையகம் அமைந்துள்ள பகுதியிலும் விமான நிலையம் அமைந்துள்ள பலாலி பிரதேசத்திலும் புதிய இராணுவ குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும். அத்துடன் காங்கேசன்துறை துறைமுகம் அமைந்துள்ள பகுதியிலும் இராணுவ குடியிருப்புகள் ஏற்படுத்தப்படும்.
யாழ்ப்பாணத்தில் இராணுவ முகாம்கள் அகற்றப்படும் பிரதேசங்களில் சிவில் நிருவாகத்தை ஏற்படுத்தி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் முழு பொறுப்பும் காவற்துறையினருக்கு வழங்கப்படும் எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment