Sunday, May 26, 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடதுசாரி கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது!

Sunday, May 26, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடதுசாரி கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
 
13ம் திருத்தச் சட்ட அமுலாககம் தொடர்பில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இடதுசாரி கட்சித் தலைவர்களான திஸ்ஸ விதாரண, டியூ.குணசேகர மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்துள்ளனர்.
 
13ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்தோ அல்லது வலுவிழக்கச் செய்தோ வட மாகாணசபைத் தேர்தல் நடத்தக் கூடாது என இடதுசாரி கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
வடக்கு காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் குறித்தும் இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் ரத்து செய்யப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர்.
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் ஆர்.சம்பந்தன், சுரேஸ் பிரேமசந்திரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment