Thursday, April 4, 2013

சர்வதேச உறவுகள் மற்றும் செயற்றிட்ட கற்கைக்கான லக்ஸ்மன் கதிர் காமர் நிலையத்தில் 'Common Differences' (பொது வேறுபாடுகள்) என்ற ஆவணப்படமானது நேற்று(ஏப் 03) திரையிடப்பட்டது!

Thursday, April 04, 2013
இலங்கை::சர்வதேச உறவுகள் மற்றும் செயற்றிட்ட கற்கைக்கான லக்ஸ்மன் கதிர் காமர் நிலையத்தில் 'Common Differences' (பொது வேறுபாடுகள்) என்ற ஆவணப்படமானது நேற்று(ஏப் 03) திரையிடப்பட்டது. இந்நிகழ்வில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி செயலாளர் திரு. கோட்டாபய ராஜபக்ஷ அர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
 
ஆயிரக்கணக்கான உயிர்களைக் காவுகொண்ட கொடூர யுத்தமானது முடிவுக்கு வந்ததையிட்டு சகல சமூகங்களையும் இனங்களையும் சார்ந்த மக்கள் ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழக்கூடிய இத்தருனத்தில்
இவ் ஆவணப்படமானது இலங்கையின் இன முரண்பாட்டில் நடு நிலையான பார்வையைத் தோற்றுவிப்பதுடன். பணிப்பாளர் டானியல் ரிக்கியினால், பாதுகாப்பு செயலர் உட்பட பிரதி அமைச்சர் வீ. முரளிதரன் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் பல சமய பிர பலங்கள் உட்பட அதிகமானோருடன் நேர்முகம் கானும் நிகழ்வொன்றும் இடம் பெற்றது.
 
இந்நிகழ்வில் இராஜதந்திரிகள் உட்பட இராணுவ, மற்றும் கடற்படைத் தளபதிகள்,நிபுனர்கள்,ஊடகவியலாளர்கள் என பெருந்திரளானோர் அழைக்கப்ட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

No comments:

Post a Comment