Saturday, April 20, 2013

இலங்கையில் அல் – கொய்தா, ஜிஹாத் குழுக்கள் செயற்படுகின்றன – பொதுபலசேனா!

Saturday, April 20, 2013
இலங்கை::இலங்கையில் அல் – கொய்தா மற்றும் ஜிஹாத் போன்ற முஸ்லிம் பயங்கரவாத குழுக்கள் செயற்படுகின்றன. இது குறித்து அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கள் உண்மையாகும். எனவே அரசாங்கமும், பாதுகாப்பு தரப்புகளும் உடனடியாக செயற்பட்டு உள்நாட்டில் இயங்கும் முஸ்லிம் பயங்கரவாத குழுக்களை அடியோடு வேரறுக்க வேண்டும் என்று பொதுபல சேனாவின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்தார்.
 
பல முஸ்லிம்கள் இந்தப் பயங்கரவாத குழு
க்கள் தொடர்பில் தகவல்களை வழங்கியுள்ளனர். உலமா சபை ஊடாகவே மேற்படி முஸ்லிம் பயங்கரவாதிகள் இலங்கைக்குள் ஊடுருவுகின்றனர். இங்குள்ள அப்பாவி முஸ்லிம் குழந்தைகளை சவூதி மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அழைத்துச் சென்று மிகவும் மோசமான வகையில் அடிப்படை வாதத்தையும், பயங்கரவாதத்தையும் போதிக்கின்றனர் என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.
 
இதுத் தொடர்பில் கிரமவிமலஜோதி தேரர் தொடர்ந்தும் கூறுகையில்,
அமெரிக்கா – போஸ்டன் நகரில் கடந்த திங்கட்கிழமை பயங்கரவாதிகளினால் குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன. இதனை பொதுபலசேனா வன்மையாக கண்டிக்கின்றது. இந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கம் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளின் ஊடாகவே மேற்படி பயங்கரவாத குழுக்கள் அமெரிக்காவிற்குள் ஊடுருவுகின்றன என்றும் அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பொதுபலசேனா ஏற்கனவே முஸ்லிம் அடிப்படைவாத பயங்கரவாத குழுக்கள் இலங்கையில் செயற்படுகின்றன என்பதை தெட்டத்தெளிவாகக் கூறியிருந்தது. தற்போது அதனை அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது. மீண்டும் இலங்கையில் குண்டு வெடிப்பதற்கு முன்னர் முஸ்லிம் பயங்கரவாத குழுக்களை விரட்டியடிக்க வேண்டும்.
இந்தக் குழுக்கள் பெரும்பாலும் கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தியே செயற்படுகின்றன. அரசாங்கம் இந்த விடயத்தில் காலம் கடத்துவது ஆபத்தானதாகும் என்றார்.

No comments:

Post a Comment