Tuesday, April 9, 2013

இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம்!

Tuesday, April 09, 2013
இலங்கை::இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம்
 
இலங்கை வந்துள்ள இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் இன்று முற்பகல் பாராளுமன்றத்திற்குச் சென்றுள்ளனர்.
பாராளுமன்ற சபை அமர்வுகளைப் பார்வையிடுவதே இந்த விஜயத்தின் நோக்கமெனவும் இன்று நண்பல் சபாநாயகர் சமல் ராஜபக்ஸவுடன் அவர்கள் கலந்துரையாடவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ரொட்னி பெரேரா குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்திய பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவினர் இன்று மாலை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றிரவு வருகை தந்த இந்தக் குழுவினர் எதிர்வரும் 12ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது...

இலங்கை வந்துள்ள இந்த குழு எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருக்கும்.

இதன்போது இந்த குழு வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த சர்வ கட்சி குழுவில் திருனாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி, பி ஜே பி கட்சி, பஹ_ஜன சமாஜவாதி கட்சி ஆகிய கட்சிகளை சேர்ந்த 9 பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர்.

No comments:

Post a Comment