Tuesday, April 16, 2013

இந்தியாவுக்கு அளிக்கப்படும் அமெரிக்க உதவி குறைப்பு!

Tuesday, April 16, 2013
வாஷிங்டன்::இந்தியாவுக்கு அளிக்கப்படும் உதவிகளில், 16 சதவீதத்தை குறைக்க அமெரிக்கா முடிவு செய்து உள்ளது.
 
அமெரிக்க பட்ஜெட் தொடர்பாக, வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ஒவ்வொரு நாட்டுக்கும் அளிக்கப்படும் நிதி உதவியை குறைப்பது அல்லது அதிகரிப்பது குறித்து, பார்லிமென்டுக்கு பரிந்துரை செய்துள்ளார்.
 
இதன் படி இந்தியாவுக்கு அளிக்கப்படும் உதவிகளில், 16 சதவீதத்தை குறைக்கும் படி அவர் பரிந்துரை செய்துள்ளார்.இதே போல இலங்கைக்கு அளிக்கப்படும் நிதி உதவியில், 20 சதவீதம் குறைக்கவும் அவர்
பரிந்துரை செய்துள்ளார்.
 
பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு அளிக்கப்படும் உதவியும் குறைக்கப்பட உள்ளது. ஆனால், மாலத்தீவுக்கு அளிக்கப்படும் உதவிகளை அதிகரிக்க, ஜான் கெர்ரி பரிந்துரை செய்து உள்ளார்.

No comments:

Post a Comment