Tuesday, April 16, 2013

இந்திய கடலில் 45 நாட்களுக்கு மீன்பிடி தடை: போலி குற்றச்சாட்டுகளை சுமத்தும் வாய்ப்பை இழந்தனர் தமிழக அரசியல்வாதிகள்!

Tuesday, April 16, 2013
இலங்கை::இலங்கைக்கும் இந்தி யாவுக்கும் இடையிலான கடற்பரப்பில் நேற்று முதல் பூரணை நிலவுவதற்கான வாய்ப்பு உருவாகியிருக் கிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் ஏப்ரல் மாதம் 15ம் திகதி முதல் மே மாதம் 31ம் திகதி வரை மீன்பிடி நடவடிக்கைக ளில் ஈடுபடலாகாது என்று இந்திய மத்திய அரசாங் கம் விடுத்துள்ள தடை உத்தரவை அடுத்து இந்த நிலை உருவாகியிருக்கி றது.
மீன்கள் உட்பட கடல்வாழ் உயிரி னங்கள் முட்டையிட்டு இனவிருத்தி செய் வதற்கான காலம் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் என்பதால், இக்காலப் பகுதியில் 45 நாட்களுக்கு மீன்பிடிக்கக் கூடாது என ஒவ்வொரு ஆண்டும் இந்திய அரசினால் அறிவிக்கப்படுகிது. அந்த வகையில் இம்முறையும் இந்த 45 நாள் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவினால் தமிழ் நாட்டைச் சேர்ந்த 85 ஆயிரம் மீனவர்களுக்கு கடற்றொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கரையோர பிரதேசங்களான பர்காஷம், கிருஸ்னா மற்றும் குன்னூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களுக்கு இந்த தடை உத்தரவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.எனினும், கரையோரத்தில் இருந்து தூண்டில் போட்டு மீன்பிடித்தல், சிறுவலைகளை வீசி மீன்பிடித்தல் ஆகிய மீன்பிடி நடவடிக்கைகளுக்கு மாத்திரம் இந்த தடை உத்தரவில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இந்தத் தொழிலை சுமார் 23 ஆயிரம் கடற்றொழிலாளர்கள் செய்து வருகிறார்கள். மீன்பிடி தடை உத்தரவினால் பாதிக்கப்படும் கடற்றொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டு மாநில அரசாங்கம் 31 கிலோ அரிசியை வழங்குகிறது. மத்திய அரசாங்கம் இந்த கடற்றொழிலாளர்களுக்கு தலா 600 ரூபாவை வழங்குகிறது. இந்த தடை உத்தரவை மீறி கடலுக்கு சென்று மீன்பிடிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்படும் என்று மாநில அரசாங்கம் எச்சரிக்கை செய்துள்ளது.தமிழ் நாட்டில் உள்ள மீன்பிடி படகுகள், இழுவைப் படகுகள் ஆகியவற்றில் 85 சதவீதமானவை தமிழ்நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளான ஜெயலலிதாவின் கட்சித் தொண்டர்களுக்கும், கலைஞர் கருணாநிதியின் கட்சித் தொண்டர்களுக்கும், இவ்விரு கட்சிகளின் தலைவர்களுக்கும் சொந்தமானவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மீன்பிடி படகுகள் மற்றும் இழுவைப் படகுகளில் பணிபுரிவோருக்கு நாளாந்தம் சொற்ப தொகையே வேதனமாக கொடுக்கப்படுகிறது. அவர்கள் ஒரு வாரத்திற்கு ஒரு தடவையாவது இலங்கை கடற்படையினர் தங்களை அடித்து துன்புறுத்தினார்கள் என்று போலி முறைப்பாடுகளை தமிழக கரையோர பாதுகாப்பு படையினருக்கும், பொலிஸாருக்கும் செய்ய வேண்டுமென்றும் மீன்பிடி இழுவைக் கப்பல்களின் உரிமையாளர்கள் கடுமையான உத்தரவை பிறப்பித்திருக்கிறார்கள். அதேவேளை கடந்த வியாழக்கிழமை தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணத்து மீனவர்களை அடித்து துன்புறுத்தியதுடன், அவர்களின் மீன்பிடி உபகரணங்களையும் அடித்து உடைத்துவிட்டதாகவும் அறிவிக்கப்படுகிறது.இத்தகைய செயல்களில் ஈடுபடுவது தமிழ் நாட்டின் அப்பாவி மீனவர்கள் அல்ல என்றும் தமிழ் நாட்டு அரசியல் கட்சிகளின் குண்டர்களே மீனவர்கள் போல் வேடமணிந்து இங்கு வந்து குழப்பம் விளைவிக்கிறார்கள் என்றும் தமிழ் நாட்டில் இருந்து கிடைக்கப்பெறும் நம்பகரமான தகவல்கள் கூறுகின்றன.இந்த 45 நாள் மீன்பிடி தடை உத்தரவினால் அடுத்த 45 நாட்களுக்கு இந்திய மீனவர்கள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடிப்பதோ, இலங்கை கடற்படையினர் தங்களை அடித்து துன்புறுத்துகிறார்கள் என்று போலி குற்றச்சாட்டுகளை எழுப்புவதற்கோ சந்தர்ப்பம் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment