Thursday, April 4, 2013

ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லை: இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய!

Thursday, April 04, 2013
இலங்கை::ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படவில்லை என இராணுவம் அறிவித்துள்ளது.
 
இலங்கையில் ஊடக சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
டொலர்களை பெற்றுக்கொள்ள விரும்பும் சில தரப்பினர் ஊடக சுதந்திரம் கிடையாது என சர்வதேச ரீதியாக பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கோ, ஊடகவியலாளர்களுக்கோ அரசாங்கம் அல்லது படையினர் எவ்வித இடையூறுகளையும் ஏற்படுத்தவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
செய்தி சேகரிப்பு, பிரசூரம் அல்லது பத்திரிகை விற்பனைக்கு எவ்வித தடையும் கிடையாது என அவர் குறி;ப்பிட்டுள்ளார்.
ஊடகச் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
 
பணம் சம்பாதிக்க விரும்பும் சில தரப்பினர் நாட்டில் ஊடக சுதந்திரம் கிடையாது என சர்வதேச சமூகத்தை பிழையாக வழிநடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பாரியளவு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், யுத்த காலத்தையும் விடவும் அதிகளவு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும்
இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment