Tuesday, April 16, 2013

ராஜிவ் கொலை கைதியிடம் தகவல் ஆணைய அதிகாரி விசாரணை!

Tuesday, April 16, 2013
வேலூர்::முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை கைதியிடம், "வீடியோ கான்பரன்ஸ்' மூலம், தகவல் ஆணைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர், வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள், ஜனாதிபதிக்கு கருணை மனு கொடுத்தனர். இதை, ஜனாதிபதி தள்ளுபடி செய்தார்.
 
கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது ஏன் என, கேட்டு, பேரறிவாளன், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பினார்; பதில் வரவில்லை. இதற்கு பதில் தர மறுப்பது ஏன் என, கேட்டு, பேரறிவாளன், மத்திய தகவல் ஆணையருக்கு மனு செய்தார். இதையொட்டி, வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனிடம், மத்திய தகவல் ஆணைய அதிகாரிகள், நேற்று, வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணை நடத்தினர். அரை மணி நேரம் நடந்த விசாரணையில், முக்கிய தகவல்களை பேரளிவாளன் தெரிவித்ததாக, சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment