Tuesday, April 16, 2013

30 ஆண்டு கால பயங்கரவாத யுத்தம் முடிவடைந்த பின்னர் பொலிஸாரின் பொறுப்புகள் அதிகரித்துள்ளன!

Tuesday, April 16, 2013
இலங்கை::30 ஆண்டு கால யுத்தம் முடிவடைந்ததை அடுத்து பயங்கரவாதமும் பூண்டோடு ஒழிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று நாட்டின் முப் படைகளின் நேரடிப் பாதுகாப்பு பணிகள் பெருமளவில் குறைந் திருக்கின்றன. நாட்டின் கேந்திர நிலைகளுக்கு பாதுகாப்பு அளித் தல், நீர்த்தேக்கங்கள், இராணுவ முகாம்கள், மின்சக்தி நிலையங் கள், ஆஸ்பத்திரிகள், பாராளுமன்றம் மற்றும் அரசாங்கக் காரியால யங்களுக்கு பாதுகாப்பு அளித்தல், பிரதான பாதைகளுக்கு பாது காப்பு அளித்தல் போன்ற காரியங்களுக்கு மாத்திரமே படையினர் இப்போது பாதுகாப்பு அளிக்கும் பணிகளை செய்து வருகிறார்கள்.

பயங்கரவாதம் முறியடிக்கப்பட்ட பின்னர் நாட்டில் சட்டமும், ஒழுங்கும், அமைதியும் நிலைகொண்டுள்ள இன்றைய சூழ்நிலையில் பொலிஸாருக்கு அதிக பொறுப்புக்களை ஏற்கவேண்டி இருக்கிறது. இந்த சவால்களையும் பணிகளையும் எதிர்கொள்ளவும், பொறுப்பு களை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்க வேண்டு மென்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித் துள்ளார். நாடும் மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த சேவையை அர்ப் பணிப்புடனும் பொறுப்புடனும் வழங்க பொலிஸார் முன்வர வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் பொதுமக்களின் எதிரிகள், பொதுமக்களை துன்புறுத்து பவர்கள் என்ற பொதுவான அபிப்பிராயம் நாட்டில் வலுவூன்றியிருப்பதனால் பொலிஸார் தங்கள் பழைய போக்கை கைவிட்டு, பொதுமக்களுடன் நண்பர்களாக அவர்களுக்கு ஆபத்து ஏற்படும் போது உதவி செய்யும் துணைவர்களாக இருக்க வேண்டும் என்ற கருத்தையே பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த இலட்சியத்தை நிறைவேற்றும் முகமாக நாடெங்கிலும் உள்ள சகல பொலிஸாருக்கும் விசேட பயிற்சிப் பாசறைகளை பாதுகாப்பு அமைச்சு ஒழுங்கு செய்துள்ளது. கடந்த 30 ஆண்டு கால யுத்தத் தினால் பொதுமக்களும் ஆயுதப் படை வீரர்களும் பொலிஸ் வீரர்களும் பெருமளவில் உயிர்த்தியாகங்களை செய்துள்ளார்கள்.

இன்றைய சமதான சூழ்நிலையில் பொலிஸாருக்கு இருக்கும் சவால் களும் பொறுப்புக்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. வடக்கு, கிழக்கு, தெற்கு உட்பட நாடு முழுவதிலும் இருந்த சோத னைச் சாவடிகள் படிப்படியாக அப்புறப்படுத்தப்பட்டன. அவசரகால நிலைமை நீக்கப்பட்டது. தற்பொழுது முப்படையினரிடம் இருந்த பொறுப் புக்கள் பொலிஸார் மீது முழுமையாக சுமத்தப்பட இருக்கிறது. இத னால் நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பணியை பொலிஸார் தனித்து நின்று நிறைவேற்ற வேண்டியிருக்கிறது.

பாதாள கோஷ்டியினரை முறியடித்தல், போதைப் பொருள் கடத்த லையும் விற்பனையையும் முறியடித்தல் போன்ற பணிகளையும் பொலிஸார் சிறப்பாக நிறைவேற்ற உள்ளனர். யுத்தம் முடிவடைந்த பின்னர் சமாதான சூழ்நிலையில் இங்கு வரும் வெளிநாட்டு முதலீட்டாளருக்கு பூரண பாதுகாப்பு அளித்தல் போன்ற பணிகளையும் பொலிஸார் செய்வது அவசியமாகும்.
வடக்கு, கிழக்கில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் கொழும்பில் பயங்கரவாதிகளின் வலைபின்னலையும் பொலிஸார் முற்றுகையிட்டதன் மூலம் யுத்த முனையில் பயங்கரவாதிகளை அடிபணிய வைப்பதற்கு பேருதவியும் புரிந்தார்கள்.

பொலிஸ் படையில் பெரும்பாலானோர் நேர்மையானவர்களாக இருந்து கைலஞ்சம் வாங்குதல் போன்ற சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடாதிருக்கின்ற போதிலும் குடும்பத்தைக் கெடுக்க வந்த கோடரி காம்புகள் போன்று விரல் விட்டு எண்ணக்கூடிய சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொதுமக்களிடம் இருந்து பணத்தையும் பல்வேறு சலுகைகளையும் எதிர்பார்த்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பொலிஸ் படையில் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை கண்டுபிடித்து அவர்களை தண்டிக்கும் பணியை இப்போது பாது காப்புச் செயலாளரின் பணிப்புரையின் கீழ் பொலிஸ்மா அதிபர் தீவிரப் படுத்தியுள்ளார்.

ஒவ்வொரு பொலிஸ் நிலையத்தின் செயற்பாடு குறித்து அப்பிரதேசங்களுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தி யட்கர்கள், பொலிஸ் அத்தியட்சகர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட் சகர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் அவ்வப்போது சகல பொலிஸ் நிலையங்களுக்கும் சென்று அங்கு நடக்கும் செயற் பாடுகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத் தர்கள் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப் பட்டால் அவர்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இப்போது பொலிஸ்மா அதிபர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
 
பொலிஸார் பொதுமக்களின் நண்பர்களாக இருப்பதாயின் அவர்கள் எந்நேர மும் மக்களுடன் நெருங்கிப் பழகி பேசி நட்புறவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதனால் ஒவ்வொரு பொலிஸ் உத்தியோகத் தரும் தான் கடமை புரியும் பிரதேசத்தில் உள்ள மக்களின் மொழியை நன்கு தெரிந்திருக்க வேண்டும். தமிழ் பிரதேசங்களில் பணிபுரியும் பொலிஸாருக்கு விசேட தமிழ் மொழிப் பயிற்சியையும் பொலிஸ் திணைக்களம் இப்போது வழங்கி வருகின்றது.
 
தமிழ் மட்டும் தெரிந்தவர் கள் பொலிஸ் நிலையத்திற்கு வந்து செய்யும் முறைப்பாடுகளை தமிழி லேயே எழுதுவதற்கு போதியளவிலான தமிழ் தெரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்களை இப்போது பொலிஸ் மா அதிபர் சகல பிரதேசங்க ளுக்கும் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பொலிஸ் திணைக்களங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். பொதுமக்களின் மொழியை புரிந்து கொள்ளக்கூடிய பொலிஸ் உத்தியோகத்தர்களினால் தான் பொதுமக்களின் குறைபாடுகளை நிறைவேற்ற முடியுமென்ற ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவும் முடியும்.
 
thinakaran. 

No comments:

Post a Comment