Sunday, April 14, 2013

இலங்கையுடன் இந்தியா போட்டி நிலைமை கொண்டிருக்கவில்லை: இந்தியாவின் வெளியுறவுகள் துறை அமைச்சின் பேச்சாளர் !

Saturday, April 13, 2013
இலங்கை::இலங்கையுடன் இந்தியா போட்டி நிலைமை கொண்டிருக்கவில்லை: இந்தியாவின் வெளியுறவுகள் துறை அமைச்சின் பேச்சாளர் !
இலங்கையுடன் இந்தியா போட்டி நிலைமை கொண்டிருக்கவில்லைஎன்று
இந்தியாவின் வெளியுறவுகள் துறை அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெறும் சீனாவின் அதிகரித்த பிரசன்னம் குறித்த கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவே இலங்கையில் அதிக முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.

அதேபோன்று அதிக வேலைத்திட்டங்களையும் இந்தியா மேற்கொண்டு வருகிறது.

இது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் நன்மையை வழங்குகிறது.

எனினும் இந்தியா, இலங்கையில் ஏனைய நாடுகளுடன் போட்டியிடவில்லை
 
என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment