Sunday, April 14, 2013

குடிவரவு சட்டத்தை மீறுகின்ற நிலையில் கைது செய்யப்படுகின்ற வெளிநாட்டவர்களை குறிப்பிட்ட காலம் வரை தடுத்து வைக்கப்படப் போவதில்லை: சூலாநந்தா பெரேரா!

Saturday, April 13, 2013
இலங்கை::குடிவரவு சட்டத்தை மீறுகின்ற நிலையில் கைது செய்யப்படுகின்ற வெளிநாட்டவர்களை குறிப்பிட்ட காலம் வரை தடுத்து வைக்கப்படப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
குடிவரவு மற்றும் குடிப்பெயர் கட்டுப்பாட்டு திணைக்களத்தின் பணிப்பாளர் சூலாநந்தா பெரேராஇ ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி ஒன்றில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
 
இவ்வாறு கைது செய்யபடுகின்றவர்கள் மிரிஹானையில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
 
எனினும் அங்கு தற்போது நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளதால்
இந்த தீhமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
70 பேர் மாத்திரமே அங்கு தடுத்து வைக்க முடியும் எனினும் தற்போது 100 பேர் வரையில் அங்க இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த நிலையில் எதிர்வரும் காலத்தில் குடிவரவு சட்டங்களை மீறுகின்ற வெளிநாட்டவர்களின் கடவுச் சீட்டுகளை தமது பறிமுதல் செய்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment