Wednesday, April 17, 2013

வடக்கில் சிங்களக்குடியேற்றமும் இராணுவமயமும் இல்லை: வாசுதேவ நாணயகார!

Wednesday, April 17, 2013
இலங்கை::வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை அரசாங்கம் மேற்கொள்கின்றது என்ற குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.
 
வடக்கில் இனப்பரம்பலில் அரசாங்கம் மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக கூட்டமைப்பினர் கூறும் குற்றச்சாட்டானது ஏற்க முடியாதது. ஆனால் வடக்கில் இராணுவப் பிரசன்னம் அதிகம். குடியியல் நிர்வாகத்தில் இராணுவத்தினர் தலையீடுகள் உள்ளன. வடக்கில் குடியியல் நிர்வாகம் இல்லை. எனவே இராணுவப் பிரசன்னத்தைக் குறைத்து இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கி முழமையான குடியியல் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும் என்றார். 
 
இதேவேளை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை படிப்படியாக அமுல்படுத்தி வருகின்றது. வடக்கில் தமிழ் மக்களை அரசாங்கம் அடிமைப்படுத்தவில்லை. தமிழ் மக்களின் தேவைகளை அரசாங்கம் நிறைவேற்றி வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment